நாசிக்கில் பணம் அச்சடிக்கும் அரசு அச்சகங்களில் உள்ள 40 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால் இரு அச்சகங்களும் வியாழக்கிழமை வரை மூடப்படுகின்றன.
கரன்சி நோட் பிரஸ் என்றும் இந்தியா செக்யூரிட்டி பிரஸ் என்றும் இரு பிரதான அச்சகங்கள் உள்ளன.
முதல் அச்சகத்தில் ரூபாய் நோட்டுகளும் இரண்டாவது அச்சகத்தில் பாஸ்போர்ட், விசா, பதிவுத்தாள்கள், தபால் தலைகள் போன்றவை அச்சிடப்படுகின்றன.
நாள் ஒன்றுக்கு இங்கு சுமார் பல்வேறு மதிப்புகளைக் கொண்ட 17 மில்லியன் நோட்டுகள் அச்சிடப்படுகின்றன.
கடந்த 3 மாதங்களில் இந்த இரு அச்சகங்களிலும் 125 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.