சுசாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கில் அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தியிடம் சிபிஐ 3ஆவது நாளில் 9 மணி நேரம் விசாரணை நடத்தியது.
மும்பையின் சாந்தாக்ருஸ் (Santacruz) பகுதியில் உள்ள டிஆர்டிஓ விருந்தினர் இல்லத்தில் வைத்து ரியாவிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
சிபிஐ அதிகாரிகள் பல கேள்விகளை எழுப்பியதாகவும், அப்போது சுசாந்தின் தற்கொலைக்கு தான் காரணம் இல்லை என ரியா பதிலளித்ததாகவும் சொல்லப்படுகிறது.
4வது நாளாக, ரியாவின் தம்பியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், சுசாந்தின் மேலாளர் சாமுவல் மிராண்டா மற்றும் உதவியாளர் கேசவ் ஆகியோரும் நேற்று விசாரணைக்கு ஆஜராகினார்.
இதனிடையே, 4வது நாளாக இன்றும் ரியாவிடம், சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.