நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு தண்டனை விபரத்தை உச்ச நீதிமன்றம் இன்று அறிவிக்கிறது.
உச்சநீதிமன்றத்தையும், தலைமை நீதிபதியையும் விமர்சனம் செய்து ட்விட்டரில் அவர் கருத்து தெரிவித்திருந்ததை, நீதிமன்ற அவமதிப்பாகக் கருதிய உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்தது.
இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று தீர்ப்புக் கூறிய நீதிமன்றம் அவரை மன்னிப்புக் கேட்க வலியுறுத்தியது. ஆனால் பிரசாந்த் பூஷண் மன்னிப்புக் கேட்க மறுத்து விட்டதால் அவருக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.