55 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆறு அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை கட்டமைக்கும் திட்டத்திற்கான ஏலப்பணிகளை, மத்திய அரசு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது.
முன்னணி வெளிநாட்டு நிறுவனங்களுடன் இந்திய நிறுவனங்கள் இணைந்து இவற்றை கட்டமைக்க உள்ளன. பி-75 என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான சிறப்பு அம்சங்கள் மற்றும் முக்கிய தேவைகள் தொடர்பான பணிகள், பாதுகாப்பு அமைச்சகத்தின் பல்வேறு குழுக்கள் மூலம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் சீனாவின் கடல்வலிமையை இந்திய கடற்படை எதிர்கொள்ளும் வகையில், இத்திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.