பயணிகளின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் விமான நிலையங்களில் தேங்கி கிடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி நிலவரப்படி,விலை உயர்ந்த உள்ளாடைகள், காலணிகள், ஒயின் பாட்டில்கள், லெதர் ஜாக்கெட்டுகள் என 4689 வகையான பொருட்கள் இந்த பட்டியலில் உள்ளன.
சென்னை விமான நிலையத்தில் கிடார், மது பாட்டில்கள், சிகரெட்டுகள் உள்ளிட்டவை பயணிகளால் விட்டுச் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இவற்றில் அழுகும் பொருட்கள் 48 மணி நேரத்திற்குப் பிறகு அழிக்கப்படுவதாகவும், இதர பொருட்கள் 90 நாட்கள் வரை வைக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்கள் வரவில்லை என்றால், ஏலம் விடப்படுவதாகவும் இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.