உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகின.
காஜியாபாத்தில் இருந்து வல்லப்கார் பகுதிக்கு அந்த ரயில் சென்று கொண்டிருந்தது. ஆக்ரா- டெல்லி வழித்தடத்தில் விருந்தாவன் சாலை-ஆலை ரயில் நிலையத்துக்கு (Vrindavan Road & Azhai station) இடைப்பட்ட பகுதியில் வந்தபோது 5 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகின. இதனால் டெல்லி-ஆக்ரா வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் யாரும் காயமடையவோ, உயிரிழக்கவோ இல்லை. சம்பவ இடத்துக்கு ரயில்வே ஊழியர்கள் வந்து தடம்புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்