பொதுமக்கள் கொரோனா முன்னெச்சரிக்கைகளுடன் ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக திருவனந்தபுரத்தில் பேசிய அவர், நோய்த்தொற்று பரவல் அதிகரித்து கொண்டிருக்கும் சூழலில் நடப்பாண்டு ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை சுட்டிக்காட்டினார்.
மேலும், எதிர்காலத்திற்கான நம்பிக்கையை தரும் இந்த விழாவை, பொது இடங்களில் கூடி கொண்டாட வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, ஊரடங்கு காரணமாக பிரசித்தி பெற்ற படகு போட்டி போன்றவையும் நடப்பாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது