எல்லையில் ஏற்படும் அழுத்தத்தால் இந்தியா - சீனா இடையே உள்ள உறவு பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் செய்து கொண்ட உடன்படிக்கைகளை சீனா பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தியா சீனா இடையிலான உறவு பொருளாதாரம் உள்பட பல்வேறு பரிணாமங்களில் முன்னேற்றம் கண்டிருந்தது என்றும், எல்லையில் வெளிப்படைத்தன்மையான அணுகுமுறைகளும் அமைதியும் நீடித்திருந்ததால் இது சாத்தியமானது என்றும் சுட்டிக்காட்டிய அவர், அந்த அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டால் அது இருதரப்பு உறவுகளையும் பாதிப்பதும் இயற்கையானது என்றும் தெரிவித்தார்.