ரஷ்யாவில் அடுத்த மாதம் நடக்கவுள்ள பிரமாண்டமான ராணுவப் பயிற்சியில் சீனா, பாகிஸ்தான் பங்கேற்கும் நிலையில் இந்தியா அதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. தெற்கு ரஷ்யாவின் அஸ்ட்ராகான் பிராந்தியத்தில் காவ்காஸ் -2020 என்ற பெயரில் பிரமாண்டமான ராணுவ ஒத்திகை நடக்கிறது.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த கூட்டு ராணுவ ஒத்திகையில் 20க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்பது வழக்கம். நடப்பாண்டுக்கான பயிற்சி அடுத்த மாதம் 15ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியில் இந்தியா பங்கேற்காது என பாதுகாப்புத்றை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டு காவ்காஸ் கூட்டு ராணுவப் பயிற்சியில் இந்தியா பங்கேற்காது என்று தெரிவித்துள்ளார்.