சரக்கு போக்குவரத்திற்காக சுமார் 81 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இருப்புப் பாதைகள் அமைக்கும் திட்டத்திற்கு உள்ள இடையூறுகளை நீக்குமாறு, 9 மாநில முதலமைச்சர்களுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கடிதம் எழுதியுள்ளார்.
குஜராத், பஞ்சாப், உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட 9 மாநில முதலமைச்சர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், திட்டத்தை தாமதமாக்கும் வகையில் உள்ள நிலம் கையகப்படுத்துதல், நிலுவையில் உள்ள மத்தியஸ்தம், கிராமவாசிகளின் கோரிக்கைகள், மந்தமாக செயல்படும் அதிகாரிகள் போன்ற பல்வேறு சிக்கல்களை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த திட்டத்தை பிரதமர் மோடி உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், நீடித்துள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கான பரிந்துரைகளை வழங்குமாறும் கடிதத்தில் பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டுள்ளார்.