வெட்டுக்கிளிகள் பரவலை நவீன தொழில்நுட்பங்களை கொண்டு இந்தியா கட்டுப்படுத்தி விட்டதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம், ஜான்சி ராணி லட்சுமி பாய் விவசாய பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள கல்லூரி மற்றும் நிர்வாக அலுவலக புதிய கட்டிடங்களை காணொலி மூலம் திறந்து வைத்து பேசிய அவர், வெட்டுக்கிளிகளால் 10 மாநிலங்கள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதை ஒழிக்க நவீன இயந்திரங்களை வாங்கி மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு அளித்ததாகவும் குறிப்பிட்டார்.
மருந்துகளை தெளிக்க ஹெலிகாப்டர்களும், டிரோன்களும் பயன்படுத்தப்பட்டதாக கூறிய பிரதமர், அவை அனைத்தையும் கொண்டு வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தி பேரிழப்பில் இருந்து விவசாயிகளை அரசு காத்து விட்டதாக தெரிவித்தார்.