வங்கி கடன்களுக்கான மாதாந்திர தவணைத் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசத்தை ரிசர்வ் வங்கி நீட்டிக்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா ஊரடங்கால் தொழில்கள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு கடந்த 6 மாதங்களாக கடனுக்கான மாதாந்திர தவணைத் தொகையை திருப்பிச் செலுத்த ரிசர்வ் வங்கி அவகாசம் வழங்கியிருந்தது- இந்த அவகாசம் 31ம் தேதியுடன் முடிவடையவுள்ளது.
இதனால் அந்த அவகாசம் நீட்டிக்கபடுமா, இல்லையா என கடன் பெற்றவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஆனால் அவகாசத்தை நீட்டித்தால் அது கடன்தொடர்பான நடவடிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என ரிசர்வ் வங்கி கருதுவதால் அதை நீட்டிக்காது என தகவல்கள் வெளியாகியுள்ளன.