ஆந்திர மாநிலம் கடப்பா அருகே மது கடத்திய காரை பிடித்து தொங்கிக் கொண்டேஇரண்டு கிலோமீட்டர்கள் சென்று மதுபாட்டில்களை பறிமுதல் செய்த உதவி ஆய்வாளரை உயரதிகாரிகள் பாராட்டினர்.
புலிவெந்துலா பகுதி காவல் உதவி ஆய்வாளர் கோபிநாத் ரெட்டிக்கு, ஒரு காரில் மதுகடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்குள்ள சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்ததுபோது, ஒரு கார் நிற்பது போல் வந்து திடீரென வேகமாக சென்றுள்ளது.
அதனைக் கவனித்த எஸ்ஐ கோபிநாத், காரின் முன்பகுதியில் தாவி ஏறிக் கொண்ட நிலையில் தொங்கிக் கொண்டே இரண்டு கிலோமீட்டர் பயணித்தார்.
இதனிடையில் அவரது காலால் காரின் முன் கண்ணாடியை உடைக்கவே, ஓட்டுநர் காரை நிறுத்தி தப்பித்து சென்று விட்டார். காரில் இருந்த 82 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.