தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் நாடான பாகிஸ்தான் தன்னை தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடாக சித்தரிக்க முயற்சிப்பதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார்.
தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடாக தன்னை கூறிக் கொள்ளும் அந்நாடு தொடர்ந்து தேடப்படும் தீவிரவாதிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் அடைக்கலம் தரும் நாடாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்த ஜெய்சங்கர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மும்பை தாக்குதல், அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் போன்ற சம்பவங்களால் உலக நாடுகள் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.