கொரோனா காலகட்டத்தில் நீட், JEE தேர்வுகளை நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் அதன் மாணவர் அமைப்பு சார்பில் நாடு முழுதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
டெல்லியில் காங்கிரஸ் தொண்டர்கள், மத்திய கல்வி அமைச்சகம் அமைந்துள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
காங்கிரஸ் தொண்டர்களை கைது செய்த போலீசார் அவர்களை மந்திர்மார்க் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
பெங்களூரு ரேஸ் கோர்ஸ் சாலையில் காங்கிரஸ் மாணவர் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொரோனா காலத்தில் நீட் JEE தேர்வுகளை நடத்தினால் அதை எழுதும் மாணவர்கள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோரும் வைரஸ் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.
இதைப் போன்று உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பீகார், உத்தராகண்ட், பீகார், ஒடிசா, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.