அமெரிக்க அதிபர் டிரம்பால் தடை விதிக்கப்பட்டுள்ள H-1B ,L-1 F, M மற்றும் J உள்ளிட்ட விசாக்களை புதுப்பிற்பதற்கான விண்ணப்பங்களை இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் உள்ள டிராப் பாக்சுகளில் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாக்களில், ஏற்கனவே பணியாற்றிய நிறுவனங்களில் மீண்டும் அதே பணிக்கு செல்ல விரும்புபவர்களுக்கு தடை பொருந்தாது என அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதே நேரம் இந்த மாத மத்தியில் இருந்து பெறப்படும் மாணவர்களுக்கான விசா விண்ணப்பங்களை கையாளுவதில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.