புனே பாரதி வித்யாபீட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், நேற்று ஆக்ஸ்போர்டு தடுப்பூசியான கோவிஷீல்டு போடப்பட்ட இரண்டு பேரும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் கட்ட கிளினிகல் சோதனை இங்கு நடக்கிறது.
முதலில் 32 மற்றும் 48 வயதான இரண்டு ஆண்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதாகவும், தடுப்பூசி போடப்பட்டு 24 மணி நேரம் ஆன நிலையில் அவர்களுக்கு எந்த உடல் ரீதியான பிரச்சனையும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம்.
இன்று மேலும் 3 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இந்த 5 பேருக்கும் ஒரு மாதம் கழித்து தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் போடப்பட உள்ளது.