மேற்கு வங்க மாநிலத்தில் கடலுக்கடியில் தொலைத்தொடர்பு கேபிள் அமைப்பதற்கான அனுமதியை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பெற்றுள்ளது.
கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் ஆழ்கடல் துறைமுகம் அமைக்கப்படுவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்தார். இந்த மாவட்டத்தில் பிராட்பேண்ட் வசதி கொண்டுவரப்படும் என்றும் முன்பு தெரிவித்திருந்தார். இதனை நடைமுறைப்படுத்த கேபிள் லேண்டிங் நிலையத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அமைக்கிறது.
இதனால் பல்வேறு ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் தொலைத் தொடர்பு வசதிகள் அதிகரிப்பதுடன் முதலீட்டையும் பெறும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார். திகா பகுதியில் இதற்கென ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவின் திட்டம் மேற்குவங்கத்தை ஐடி துறையில் முன்னேற வைக்கும் என்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.