கொரோனா வைரஸ் மனித உடலின் அனைத்து உறுப்புகளையும் தாக்கி செயலிழக்க வைக்கக் கூடியது என்று ஏய்ம்ஸ் மருத்துவமனையின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மிதமான மற்றும் அறிகுறியற்ற கொரோனா நோயாளிகளிடம் மேற்கொண்ட ஆய்வுகளில் இதயத்தில் அடைப்பு மற்றும் நெஞ்சுவலி போன்ற பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. நுரையீரலை மட்டும் கொரோனா வைரஸ் தாக்கும் என்று நம்பப்படும் நிலையில், மனித உடலின் அனைத்து உறுப்புகளையும் கொரோனா பாதிக்கக்கூடியது என்று இந்த புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்றை உலகம் அறிந்த எட்டு மாதங்களில் நடைபெற்ற பல்வேறு ஆய்வுகள் மூலம் புதிதாக பல கண்டுபிடிப்புகள் வெளியாகி வருகின்றன என்று ஏய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் குலேரியா தெரிவித்துள்ளார்.