கோதுமை, தானியங்கள் போன்றவற்றின் உற்பத்தியில் ஒரு சதவீதத்தை மட்டுமே இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதாக நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.
வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, மாநிலங்களவை தலைவர் வெங்கையாநாயுடுவிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அதில், உற்பத்தி செய்த மொத்த கோதுமையின் அளவில் 0.2 சதவீதமும், தானியங்களில் 1.2 சதவீதமும், பழங்களில் 1.3 சதவீதமும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்தளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேயிலை உற்பத்தியில் 10 சதவீதம் மட்டுமே ஏற்றுமதியாகி இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வேளாண் உட்கட்மைப்பு மற்றும் வினியோகத்தை மேம்படுத்தி எகிப்து, மலேசியா, மெக்சிகோ, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியை விரிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.