மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
டிவிட்டர் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளை விமர்சித்த விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு, பிரசாந்த் பூஷணை குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்தது. ஆனாலும் மூத்த வழக்கறிஞர் என்ற முறையில் பிரசாந்த் பூஷண் மன்னிப்பு கேட்டால் அவரை விடுவிக்க முடியும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்து 30 நிமிட அவகாசம் அளித்தனர்.
இருந்த போதும் மன்னிப்பு கேட்க முடியாது என்று பிரசாந்த் பூஷண் மறுத்துவிட்டார். இது குறித்து நேற்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், மன்னிப்பு கேட்பதில் தவறு இல்லை என்பதை சுட்டிக் காட்டினர்.
மக்களுக்கு நீதிமன்றத்தின் மீதும் நீதிபதிகள் மீதும் நம்பிக்கை இழக்கும் வகையில் பிரசாந்த் பூஷண் போன்ற மூத்த வழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், தீர்ப்பை ஒத்தி வைத்தது.