இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் 75 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 22.2 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக கூறினார்.
உலக அளவில் ஒப்பிடும் போது இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 1.58 சதவீதம் என்ற குறைந்த அளவுடன் இருப்பதாக குறிப்பிட்ட அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் 2.7 சதவீதம் பேருக்கு மட்டும் ஆக்சிஜன் உதவி தேவைப்படுவதாக கூறினார்.
1.92 சதவீத நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும், 0.29 சதவீதம் பேர் மட்டும் வென்டிலேட்டர் கருவி உதவியுடன் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் ராஜேஷ் பூசன் தெரிவித்தார்.