பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 8ம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது தந்தையின் உதவியுடன், மோட்டார் பைக்கையும் சைக்கிளையும் இணைத்து புதுவித வாகனத்தை வடிவமைத்துள்ளான்.
லாகோவால் கிராமத்தை சேர்ந்த ஹர்மன்ஜோத் எனும் சிறுவன், மோட்டார் பைக்கின் முன் பகுதியையும், சைக்கிளின் பின்பகுதியையும் இணைத்து இந்த புதுவித சைக்கிளை வடிவமைத்துள்ளான்.
முன்பக்கம் பார்ப்பதற்கு மோட்டார் பைக் போலவே காட்சியளிக்கும் சைக்கிளை சிறுவன் ஓட்டி செல்வதை, அனைவரும் வியந்து பார்க்கின்றனர். ஊரடங்கு சமயத்தில் தனது தந்தையால் புது சைக்கிள் வாங்கி தரமுடியாமல் போனதால், அவரது உதவியுடனேயே பழைய சைக்கிளை வைத்து இந்த சைக்கிளை வடிவமைத்ததாக சிறுவன் ஹர்மன்ஜோத் தெரிவித்துள்ளான்.