இந்தியா மீது தீவிரவாத தாக்குதல்களை நடத்தும் திட்டத்துடன், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் ஜெய்ஷே முகம்மது தீவிரவாதிகள் சந்தித்து பேசியதாக வெளியான தகவலை அடுத்து உளவுத்துறை உஷார் படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆம் தேதி ஜெய்ஷே முகம்மதுவின் தலைவராக செயல்படும் அப்துல் ரவூப் அஷ்கரும், ஐஎஸ்ஐயின் இரண்டு உயர் அதிகாரிகளும் ராவல்பிண்டியில் சந்தித்து பேசியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலுக்கு முன்பாக இதைப் போன்ற ஒரு சந்திப்பு நடந்தது என்பதால், இந்த தகவல் கிடைத்தவுடன் இந்திய பாதுகாப்பு படைகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளன, பாலாகோட் தாக்குதலுக்குப் பிறகு இந்திய போர் விமானி அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில், பிரதமர் இம்ரான் கானை விமர்சித்த ஜெய்ஷே முகம்மது தீவிரவாத அமைப்பு அதற்கு பழிவாங்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.