தனது கைலாசா நாட்டில் மதுரை உள்ளிட்ட மூன்று மாவட்டத்தினருக்கு தொழில் தொடங்க முன்னுரிமை அளிப்பதாக நித்தியானந்தா நேரலையில் கூறியுள்ளார்.
நித்தியானந்தா உருவாக்கியதாகக் கூறப்படும் கைலாசா நாட்டில் உணவகம் திறப்பதற்கு அனுமதி கேட்டு மதுரையைச் சேர்ந்த டெம்பிள்சிட்டி ஓட்டல் உரிமையாளர் குமார் என்பவர் சமூகவலைதளம் மூலம் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கைக்கு பதில் அளிக்கும் விதமாக நித்தியானந்தா இணையதளத்தில் நேரலையில் பேசியுள்ளார்.
அப்போது, குமாரின் கோரிக்கைக்கு முன்னுரிமை அளிக்க நாட்டை நிர்வகிக்கும் சன்னியாசிகளுக்கு உத்தரவிடுவதாகவும், மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே தனது நாட்டு பொருளாதார வணிக செயல்பாடுகளில் முன்னுரிமை அளிக்க சட்டம் இயற்ற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தான் உயிரிழந்த பின் தனது உடலை திருவண்ணாமலை மலையையும், மீனாட்சி அம்மன் கோவிலையும் சுற்றி கொண்டு வந்த பின்னரே புதைக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார்.