கோழிக்கோடு விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் ஏர் இந்தியா சார்பில் இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டது.
கடந்த ஏழாம் தேதி நடந்த இந்த விமான விபத்தில் மொத்தம் 21 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாயும், சிறார்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாயும் இடைக்கால நிவாரணமாக வழங்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்களில் 25 பேர் இப்போதும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதற்கான செலவையும் ஏர் இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.
இடைக்கால நிவாரணத்தைப் பொறுத்தவரை காயமடைந்தவர்களுக்கு முதலில் வழங்கப்படுவதாகவும், இதுவரை 55 பேருக்கு நிவாரணத் தொகை வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.