வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகா வருவோருக்கு, இ-பாஸ் உள்ளிட்ட 7 கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு இ-பாஸ் முறையை கடைபிடிக்க தேவையில்லை என மத்திய அரசு அறிவித்தது.
இதையடுத்து கர்நாடகாவுக்கு வரும் வெளிமாநிலத்தவர்க்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளன. அதன்படி சேவா சிந்து செயலியில் பதிவு செய்து இ-பாஸ் பெறுவது, விமானம் மற்றும் சாலை வழியாக வந்தால் மருத்துவ பரிசோதனை செய்வது, கையில் முத்திரை குத்தப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்துவது என அனைத்து விதிமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் 14 நாட்கள் சுயமாக தனிமைபடுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.