ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், தான் கொரோனா சோதனை செய்து கொண்டதாகவும், அதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடந்த வாரம் தன்னைச் சந்தித்த ஊழியர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் ஆகியோரும் சோதனை செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ள அவர், தன்னைப் போல அவர்களும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.