ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியின் மனிதர்கள் மீதான, இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனை இந்தியாவில் இன்று தொடங்குகிறது.
அதிகப்படியான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் கோவிஷீல்ட், கொரோனாவிற்கு எதிரான நேர்மறையான முடிவுகளை வழங்கி வருவதால் அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு தன்மையை உறுதி செய்வதற்கான இரண்டாம் கட்ட பரிசோதனையை, புனேவில் உள்ள பாரதி வித்யாபீட் மருத்துவக் கல்லூரியில் சீரம் நிறுவனம் நடத்த உள்ளது.
இதனிடையே, நாட்டு மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த தடுப்பூசியை வழங்கி, இந்தியாவை தற்சார்பு கொண்டதாய் உருவாக்குவோம் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.