ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி 73 நாட்களில் பயன்பாட்டிற்கு வரும் என வெளியான செய்திக்கு, அதன் உற்பத்தி நிறுவனமான சீரம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆக்ஸ்போர்டின் கோவிஷீல்டு தடுப்பு மருந்தை உற்பத்தி செய்து எதிர்கால தேவைகளுக்கு இருப்பு வைக்க மட்டுமே, அரசு அனுமதி அளித்திருப்பதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், மக்களிடம் விற்பனை செய்வதற்கான அனுமதியை இதுவரை பெறவில்லை எனவும், தடுப்பு மருந்தின் கடைசி கட்ட சோதனை முடிவுக்கு பிறகே விற்பனை குறித்து, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் சீரம் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.