வந்தே பாரத் திட்டத்தின் அடிப்படையில் 44 செமி-அதிவிரைவு ரயில் உற்பத்திக்கான புதிய டெண்டரை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த டெண்டர் அறிவிப்பில், தொழில்நுட்பம் மற்றும் நிதி தொடர்பான இரண்டு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
முன்னதாக, கடந்த மாதத்தில் வெளியான இந்த திட்டத்திற்கான சர்வதேச டெண்டரை கைப்பற்றும் முயற்சியில், சீனா நிறுவனத்தை கூட்டாளியாக கொண்ட ஜேவி எனும் இந்திய நிறுவனம் ஈடுபட்டது.
இதையடுத்து அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நிலையில், திருத்தப்பட்ட வரைமுறைகளை கொண்ட புதிய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.