கேரளாவில் தங்கக் கடத்தல் தொடர்பான வழக்கில் முதலமைச்சர் பினராய் விஜயன் தலைமையிலான அரசுக்கு நெருக்கடி வலுத்து வருகிறது.
பினராய் விஜயன் அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. 138 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் ஆளும் இடதுசாரிக் கூட்டணிக்கு 90 இடங்கள் இருப்பதால் ஆட்சிக்கு பாதிப்பு இருக்காது என்று கூறப்படுகிறது.
கேரளா சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ள நிலையில் இந்த வழக்கு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பும் என்று கருதப்படுகிறது.
பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ளன. அரசை கண்டித்து மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார்.