ஊரடங்கு காலத்தில் ஒரு கோடியே 78 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.
மார்ச் 25ந் தேதிக்குப் பின் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் முன்பதிவு டிக்கெட்டுகளுக்கான பணம் திருப்பி வழங்கப்பட்டது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம், இது குறித்த தகவல்கள் கேட்டிருந்தார்.
அதற்கு இந்திய ரயில்வே அளித்துள்ள பதிலில், மார்ச் 25-ந்தேதியில் இருந்து தற்போது வரை ஒரு கோடியே 78 லட்சத்து 70ஆயிரத்து 644 டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 ஆயிரத்து 727 கோடி ரூபாய் திரும்ப வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.