டெல்லியில் மெட்ரோ ரெயில் சேவையை படிப்படியாக தொடங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் கொரோனா தொற்று பரவல் வேகம் சற்று தணிந்துள்ளதால், பொதுமக்கள் பயன் அடையும் வகையில் மெட்ரோ ரயில்களை சோதனை அடிப்படையில் படிப்படியாக செயல்பட மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து மெட்ரோ சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் மெட்ரோ நிர்வாகத்திற்கு .1,300 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.