உத்தரக்கண்ட் மாவட்டத்தில் ரிசிகேஷ் - பத்ரிநாத் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்ட காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
உத்தரக்கண்ட் மாநிலத்தில் பலத்த மழையால் ரிசிகேஷ் - பத்ரிநாத் நெடுஞ்சாலையில் ஏற்கெனவே நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் திடீரென மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
அப்போது மலையில் இருந்து பாறாங்கற்கள் உருண்டு சாலையில் விழுந்தன.
அந்த வேகத்தில் சாலையோடு கற்கள் பெயர்ந்து கீழே உருண்டுவிழுந்தன.
கற்களோடு மரங்களும் வேருடன் பெயர்ந்து விழுந்த காட்சி இணையத்தளத்தில் பரவி வருகிறது.