கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு நொடிக்கு நாலாயிரத்து 490 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இம்மாதத் தொடக்கத்தில் பலத்த மழை பெய்ததால் கர்நாடகத்தின் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் முழுவதும் நிரம்பியுள்ளன.
இந்நிலையில் மழைப்பொழிவு குறைந்ததால் அணைகளுக்கு நீர்வரத்தும் குறைந்துள்ளது.
கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து நாலாயிரத்து 219 கன அடியாகவும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இரண்டாயிரத்து 407 கன அடியாகவும் உள்ளது.
இதேபோல் கபினி அணைக்கு நீர்வரத்து மூவாயிரத்து 265 கன அடியாகவும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இரண்டாயிரத்து 83 கன அடியாகவும் உள்ளது.
கர்நாடகத்தில் இருந்து தமிழக எல்லையான பிலிக்குண்டுலுக்கு காவிரியில் நீர்வரத்து ஒன்பதாயிரத்து நூறு கன அடியிலிருந்து 11 ஆயிரத்து 800 கன அடியாக அதிகரித்துள்ளது.