டெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பராமரிக்கப்படும் மயில்களுடன் எடுக்கப்பட்ட வீடியோவை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.
டெல்லியில் உள்ள லோக் கல்யான் மார்க் இல்லத்தில் ஏராளமான மயில்கள் பராமரிக்கப்படுகின்றன. அவற்றுக்கு பிரதமர் மோடி உணவுகளை வைத்தபோதும், மோடியின் அருகே அவை வந்தபோதும், தோட்டத்தில் தோகை விரித்தாடுகையில் அவை அருகே மோடி நடந்து சென்றபோதும் பலமுறை வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
அதில் சுமார் 1.47 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக இணையதள பக்கங்களில் பிரதமர் மோடி இன்று பகிர்ந்துள்ளார்.