புதிய கல்விகொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள பள்ளி ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களிடம் ஆலோசனை மற்றும் கருத்துகளை மத்திய கல்வி அமைச்சகம் கேட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்திலுள்ள பள்ளி கல்வித்துறை செயலாளர் அனிதா கார்வால் இதுதொடர்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச கல்வி செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், புதிய கல்வி கொள்கையை எப்படி அமல்படுத்துவது என ஆசிரியர்களிடமும், முதல்வர்களிடமும் ஆலோசனை கேட்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், ஆதலால் http://innovateindia.mygov.in/nep2020 என்ற இணையப்பக்கத்தில் சென்று பதிவு செய்த பின்னர் தங்களது ஆலோசனைகளையும் கருத்துகளையும் ஆசிரியர்களும் முதல்வர்களும் நாளை முதல் வரும் 31ம் தேதி வரை தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.