உத்தரபிரதேசத்தில் சட்டவிரோதமாக அச்சடிக்கப்பட்ட 35 கோடி ரூபாய் மதிப்பிலான, NCERT எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன.
மீரட் நகரில் பார்த்தாபூர் பகுதியில் உள்ள குடோனில், சிறப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். சோதனையில் சச்சின் குப்தா என்பவருக்கு சொந்தமான அந்த குடோனில் இருந்து, உரிய அனுமதியின்றி அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கிருந்த புத்தகங்களையும், 6 அச்சடிக்கும் இயந்திரங்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், 12 பேரை கைது செய்தனர்.