இந்தியாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மதக்கலவரங்களை ஏற்படுத்த முயற்சிப்பதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையில் பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்கள் உயிருக்குக் குறிவைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள நல்லிணக்கைத்தை சிதைக்கவும் மதக்கலவரத்தைத் தூண்டவும் ரகசியமாக சதித்திட்டத்தில் தீவிரவாதிகள் ஈடுபட்டிருப்பதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவின் உள்நாட்டு குற்றவாளிகளைத் தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.