கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருக்கும் வாரச்சந்தைகள், உணவகங்கள், விடுதிகள் போன்றவற்றை திறக்க டெல்லி அரசு அனுமதியளித்துள்ளது.
சோதனை முயற்சியாக திங்கட்கிழமை முதல் இம்மாதம் 30ம் தேதி வரை தலைநகரில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
துணை நிலை ஆளுநர் அனில் பாய்ஜால் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு டெல்லி பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் வெளியிட்ட உத்தரவில் கொரோனா பாதிப்பில்லாத பகுதிகளில் உணவகங்களும் சந்தைகளும் இயங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடற்பயிற்சிக் கூடங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் கொரோனா தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை தமது அரசு தீவிரப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.