வரும் மார்ச் மாதம் 31 ஆம் தேதிக்கு முன்னர் ஆதாருடன் இணைக்காவிட்டால் 18 கோடி பான் அட்டைகள் செல்லாததாகி விடும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
130 கோடி பேர் உள்ள இந்தியாவில் ஒன்றரை கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்தும் நிலையில், அந்த எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது சுமார் 51 கோடி பான் அட்டைகள் உள்ளன. ஆனால் அவர்களில் 6 கோடியே 48 லட்சம் பேர் மட்டுமே வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்கின்றனர்.