நடப்பு நிதியாண்டில் இதுவரை 24 லட்சத்து 64 ஆயிரம் பேருக்குக் 88 ஆயிரத்து 652 கோடி ரூபாயைத் திருப்பிச் செலுத்தியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
முன்கூட்டிக் கூடுதலாகச் செலுத்திய வரியைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகளை வருமான வரித்துறை விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 24 லட்சத்து 64 ஆயிரம் பேருக்கு 88 ஆயிரத்து 652 கோடி ரூபாய் திரும்பச் செலுத்தப்பட்டுள்ளது.
இதில் 23 லட்சத்து 5 ஆயிரம் தனி மனிதர்களுக்கு 28 ஆயிரத்து 180 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 58 ஆயிரம் நிறுவனங்களுக்கு 60 ஆயிரத்து 472 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.