இந்துஸ்தானி இசை மேதையான பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் உடலுக்கு நேற்று மும்பையில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
கொரோனா ஊரடங்கு காரணமாக அவருடைய குடும்பத்தினர் நெருங்கிய நட்புகள் என 25 பேர் மட்டுமே இறுதிச் சடங்கில் அனுமதிக்கப்பட்டனர்.
21 துப்பாக்கி குண்டுகள் முழங்க சல்யூட் அடித்து, முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
பின்னணி பாடகர்கள் உதித் நாராயண், கைலாஷ் கெர், அனுப் ஜலோட்டா உள்ளிட்டோர் மறைந்த இசை மேதைக்கு அஞ்சலி செலுத்தினர்.
அமெரிக்காவின் நியு ஜெர்சியில் 90 வயதான பண்டிட் ஜஸ்ராஜ் கடந்த திங்கட்கிழமை மாரடைப்பு காரணமாக காலமானார். அவருடைய உடல் விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்பட்டது.