பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு கடந்த தேர்தலை காட்டிலும் இருமடங்கிற்கும் அதிகமான கூடுதல் செலவு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவலை தொடர்ந்து இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் பீகாரில் நடைபெற உள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கைகளுடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த தேர்தலுக்கு, சுமார் 625 கோடி ரூபாய் செலவு ஆவதாக மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மொத்த தொகையில் 5ல் ஒரு பங்கு, 6 லட்சம் தேர்தல் பணியாளர்களுக்கு கவச உடைகளை வாங்கவும், வாக்காளர்களுக்கு வழங்க மாஸ்க், கையுறை மற்றும் சானிடைசர் வாங்கவும் செலவிடப்படுவதாக கூறப்படுகிறது.
வாக்குவாச்சாவடிகளின் எண்ணிக்கையை இரு மடங்கு அதிகரிப்பதாலும், கூடுதல் செலவாகிறது. கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு, சுமார் 270 கோடி ரூபாய் மட்டுமே செலவானதாக கூறப்படுகிறது.