கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கடந்த ஆண்டை காட்டிலும், சரக்குப் போக்குவரத்து அதிகரித்து உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான ட்விட்டர் பதிவில், கடந்த 19ம் தேதி மட்டும் சுமார் 30 லட்சம் டன் எடையிலான சரக்குப் போக்குவரத்தின் மூலம், சுமார் 306 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஆகஸ்ட் மாதம் தொடக்கம் முதல் 19ம் தேதி வரையில் சுமார் 570 லட்சம் டன் சரக்கு ரயில் போக்குவரத்து மூலம், 5 ஆயிரத்து 461 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாகவும், இது கடந்த ஆண்டை காட்டிலும் கிட்டத்தட்ட 26 கோடி ரூபாய் அதிகம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.