மத்திய சுகாதார அமைச்சகத்தின் இ-சஞ்சீவனி சேவை மூலம் 2 லட்சம் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த சேவையை செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் இந்த சேவை மூலம் 56,346 பேர் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுள்ளனர். உத்தரபிரதேசம், ஆந்திரா, இமாச்சல பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
வீட்டிலிருந்தபடியே தொலைதொடர்பு மூலம் மருத்துவ ஆலோசனைகளை பெறும் இ-சஞ்சீவனி திட்டம் நாடு முழுவதும் 23 மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள மாநிலங்களிலும் செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.