ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் 5ஜி தொலைத்தொடர்பு சேவைக்கான அலைக்கற்றையைப் பெறச் சீன நிறுவனங்களின் பெயர்கள் இல்லாத புதிய விண்ணப்பங்களை அனுப்ப உள்ளன.
இந்தியாவில் 5ஜி சேவையைச் சோதித்துப் பார்க்கத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏற்கெனவே விண்ணப்பித்துள்ளன. ஏர்டெல் ஏற்கெனவே அளித்துள்ள விண்ணப்பத்தில் சீனாவின் ஹுவேய், இசட் டி இ நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 5ஜி சேவையை வழங்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
லடாக்கில் சீனாவுடனான மோதலுக்குப் பின் சீன நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்ற திட்டங்களுக்கு உள்நாட்டுப் பாதுகாப்பைக் காரணங்காட்டி ஒப்புதல் அளிக்க மத்திய அரசு தயங்கி வருகிறது. இந்நிலையில் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்காகச் சீன நிறுவனங்களின் பெயர்கள் இல்லாத புதிய விண்ணப்பங்களை அளிக்க உள்ளன.