டெல்லி மக்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று வந்து அவர்களின் உடலில் அதற்கான ஆன்டிபாடீஸ் உருவாகிவிட்டதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் நடத்தப்பட்ட ரத்த ஆய்வு முடிவுகளின்படி சுமார் 58 லட்சம் பேருக்கு ஆன்டிபாடீஸ் உருவாகியுள்ளது என டெல்லி சுகாதார அமைச்சர் சத்தியேந்தர் ஜெயின் கூறியுள்ளார். இவர்களில் அதிகபட்சமாக தென்கிழக்கு மாவட்டத்தில் 33 புள்ளி 2 சதவிகிதம் பேருக்கு ஆன்டிபாடீஸ் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த மக்கள் தொகையில் 40 சதவிகிதம் பேருக்கு ஆன்டிபாடீஸ் உருவானால், சமுதாய நோய் எதிர்ப்புத் திறன் ஏற்பட்டுள்ளதாக கருதப்படும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆன்டிபாடீஸ் ஆறு முதல் 8 மாதங்கள் வரை உடலில் நீடித்து இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.