தேசிய பணியாளர் தேர்வு முகமை இளைஞர்களுக்கு மிகப்பெரிய வரமாகத் திகழும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்ட பிரதமர் மோடி அரசுவேலைவாய்ப்புகளில் வெளிப்படைத் தன்மை ஏற்பட இத்திட்டம் உதவும் என்று தெரிவித்துள்ளார்.
இளைஞர்களுக்கு தேசிய பணியாளர் தேர்வு முகமை மிகப்பெரிய வரமாகத் திகழும் என்றும் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பொதுத் தகுதித் தேர்வு மூலம் பணிக்கான தேர்வு நடைபெறும் என்றும் அரசு வேலைவாய்ப்பைத் தேடுவோருக்கு நடத்தப்படும் பலவகையான சோதனைகளைக் குறைப்பதுடன் பொன்னான நேரத்தையும் மிச்சப்படுத்தும் என்பதையும் மோடி சுட்டிக் காட்டியுள்ளார்.